தண்ணீர் தண்ணீர்,
காவேரி வடிநில வறட்சி தொடருது
வக்கீல் சதம் 1200 கோடி
வருது வருது நீதி வருது 17 வருடமா
தண்ணீரோட சேர்ந்து வருது
சோழ நாடு சோறுடைத்த நாடு
இப்போ சோர்ந்து போயி
சோகத்துல தள்ளாடுது
முல்லை பெரியார் பலம் போச்சாம்
அன்று கட்ட 8 வருடம்
பொத்தல் அடைக்க 13 வருடம்
ஆனாலும் 18 கோடி கணக்காச்சி
பத்தலையாம் இடிச்சே ஆகணுமாம்
ஜனநாயகத்தின்
மூணு தூணும் முடங்கி போச்சு
நாலாம் தூண் கல்லாகட்டுது
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
வாங்க வாங்க எங்களை ஆள வாங்க
பாண்டி நாடு படுத்து தூங்குது
தேனீ கம்பம் முழிச்சி பார்க்குது
120 அடி அதுக்கு போதுமே
மேல வந்தாதான் கிழக்கு செழிக்கும்
136 நிலைத்து போனதால்
152 மறந்து போச்சோ?
38000 ஏக்கர் தரிசா போச்சு
86000 ஏக்கர் ஒரு போகம் ஆச்சு
ஆனா என்ன
ரியல் எஸ்டேட் கல்லாகட்டுது
ஆத்து மணலும் கேரளா போகுது
எங்களுக்கு தேவை எல்லாம்
அரிதார முகமும்
அடுக்கு வசனமும்
வெள்ளிதிரையோ சின்னத்திரையோ
அது மட்டும் போதும்
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
வாங்க வாங்க எங்களை ஆள வாங்க
வந்து போடுங்க பட்டை நாமம்
அடுத்து போடுங்க வடகலையா
தென்கலயானு பட்டிமன்றம்
கட்சிய காணோம், கொடிய காணோம்
மேடை காணோம், மாண்புமிகுவும் காணோம்
பாட்டாளியின் போராட்டம், வயித்து பசி போராட்டம்
142 கேட்டுத்தான் இன்றைக்கு போராட்டம்,
கடல்ல கலக்குற தண்ணிக்குதான் போராட்டம்
மீண்டும் பட்டினி சாவா, பத்துலட்சம் உயிர் பலியா ?
தாங்காது தமிழா ரௌத்திரம் பழகு!